ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் கொல்லப்பட்டார்

ஓக்டோபர் ஏழு தாக்குதலை திட்டமிட்டு முன்னெடுத்த பின்னர் தலைமறைவான யஹ்யா சின்வரை இஸ்ரேலிய இராணுவம் கடந்த ஒரு வருடகாலமாக தேடிவந்தது. 61வயதான சின்வர் கடந்த ஒரு வருடகாலமாக காசா பள்ளத்தாக்கின் சுரங்கப்பாதைகளிற்குள்ளேயே வாழ்ந்தார் என கருதப்படுகின்றது.அவரின் பாதுகாப்பிற்கு என மெய்ப்பாதுகாவலர்கள் குழுவொன்று காணப்பட்டது இஸ்ரேலின் பணயக்கைதிகள் அவருடனேயே மனிதக்கேடயங்களாக வைக்கப்பட்டிருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் காசாவின் தென்பகுதியில் அவர் இஸ்ரேலின் ரோந்துபடைப்பிரிவொன்றை எதிர்கொண்டார் அவ்வேளை அதிகளவில் மெய்பாதுகாவலர்கள் இருக்கவில்லை, பயணக்கைதிகளும் காணப்படவில்லை.

யஹ்யா சின்வருக்க என்ன நடந்தது என்பது குறித்து சிறிதளவு விபரங்களே வெளியாகியுள்ளன.

வழமையான ரோந்து நடவடிக்கை

புதன் கிழமை ரபாவின் டல் அல் சுல்டான் பகுதியில் 828வது பிஸ்லமச் படையணி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தது என இஸ்ரேல் தெரிவிக்கின்றது.

இதன்போது மூன்று தீவிரவாதிகளை அடையாளம் கண்ட இஸ்ரேலிய படையினர் அவர்கள் மீது தாக்குதலை மேற்கொண்டு கொலைசெய்துள்ளனர்.

எனினும் தங்களால் கொல்லப்பட்டவர்களின் விபரங்களை அறியாத இஸ்ரேலிய படையினர் முகாம்களிற்கு திரும்பியுள்ளனர்.

அதன்பின்னர் கொல்லப்பட்ட ஒருவரின் உடலை சோதனையிட்டவேளை அது யஹ்யா சின்வரின் உடல் போல காணப்பட்டுள்ளது.

எனினும் உடலை சுற்றி வெடிபொருட்கள் காணப்படலாம் என அச்சத்தினால் அதனை முழுமையாக அகற்றாத இஸ்ரேலிய படையினர் அதன் விரலை மாத்திரம் வெட்டி இஸ்ரேலிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.

அவரது உடல் காணப்பட்ட பகுதி பாதுகாப்பானதாக்கப்பட்ட பின்னர் அவரது உடலை இஸ்ரேலிற்கு கொண்டு சென்றுள்ளனர்.

சின்வர் அங்கிருக்கின்றார் என தெரியாமலே எங்கள் படையினர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர் என இஸ்ரேலிய இராணுவ பேச்சாளர் டானியல் ஹகரி தெரிவித்துள்ளார்.

ஒவ்வொரு வீடுவீடாக தப்பியோடிக்கொண்டிருந்தவர்களை கண்டு அவர்களின் மீது எங்கள் படையினர் தாக்குதலை மேற்கொண்டனர் அவர்களை ஒவ்வொருவராக தனிமைப்படுத்தினார்கள் சின்வர் என கருதப்படும் நபர் கட்டிடமொன்றை நோக்கி தனியாக ஒடினார்,ஆளில்லா விமானத்தை பயன்படுத்தி அவர் இருக்கும் இடத்தை அடையாளம் கண்டு அவரை கொன்றோம் என இஸ்ரேலிய இராணுவபேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வேளை சின்வர் பணயக்கைதிகயாக பயன்படுத்தினார் என கருதப்படும் இஸ்ரேலியர்கள் எவரும் அப்பகுதியில் காணப்படவில்லை.அவரது இறுதி நிமிடங்கள் அவர் இஸ்ரேலிய படையினர் கவனிக்காத விதத்தில் அவர் நடமாடினார் அவரது மெய்பாதுகாவலர்கள் பலர் இறந்துவிட்டனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply