நாடாளுமன்றத் தேர்தல்: 750,000 தபால் மூல விண்ணப்பங்கள்

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக 7 இலட்சத்து 50 ஆயிரம் தபால் மூல விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் தபால் மூலம் வாக்களிப்பவர்களுக்கான வாக்காளர் பட்டியல் அத்தாட்சிப்படுத்தல் நடவடிக்கை இடம்பெற்றதுடன் தபால் மூல வாக்குச்சீட்டுகள் எதிர்வரும் 23ஆம் திகதி தபாலிடல் பணிகளுக்காக கையளிக்கப்படவுள்ளன.


இதேவேளை, எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு 5 நாட்கள் இடம்பெறவுள்ளன.

இதன்படி, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், பொலிஸ் நிலையங்களில் எதிர்வரும் 30ஆம் திகதியும் அடுத்த மாதம் 4ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. ஏனைய அரச நிறுவனங்களிலும் இராணுவ முகாம்களிலும் அடுத்த மாதம் முதலாம் திகதியும் 4ஆம் திகதியும் தபால் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளது.
குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக அடுத்த மாதம் 7ஆம் 8ஆம் திகதி வாக்களிக்கச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply