கடவுச்சீட்டு விநியோகம் இன்று வழமைக்கு திரும்பும்:அமைச்சர் விஜித ஹேரத்

இலங்கையில் பெரும் சிக்கலாக மாறியிருந்த கடவுச்சீட்டு விநியோகம் இன்று (21) முதல் வழமை போன்று இடம்பெறும் என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கோரப்பட்ட புதிய வெளிநாட்டு கடவுச்சீட்டின் ஒரு தொகுதி நாட்டை வந்தடைந்துள்ளது. அதற்கமைய இன்று முதல் கடவுச்சீட்டு விநியோகம் இடம்பெறும்.

இதன்மூலம் கடவுச்சீட்டுக்கு நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை முடிவுக்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

விண்ணப்பம் செய்யப்பட்டுள்ள 750,000 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் விரைவில் தீர்ந்துவிடும். இதனால் மீண்டும் கடவுச்சீட்டு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில் தடையின்றி கடவுச்சீட்டினை வழங்குவதற்கு தேவையான கொள்வனவு செய்வது தொடர்பில் அமைச்சரவையில் கலந்துரையாடப்பட்டுள்ள நிலையில் அதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடவுச்சீட்டுகள் மற்றும் அதிக கடவுச்சீட்டுகளை விலை மனுக்கோரல் நடைமுறையின்படி இறக்குமதி செய்ய வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலத்திரனியல் கடவுச்சீட்டு தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது.

அது தொடர்பான தீர்வு வெளியானவுடன் ஈ-பாஸ்போர்ட் வழக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இன்று முதல் கடவுச்சீட்டு பெறும் நடவடிக்கை வழமை போன்று நடைபெறும் என்றும், பொது மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply