அரசியல் நோக்குடனேயே ஈஸ்டர் தாக்குதல் குறித்து இரு அறிக்கைகள்
பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில வெளியிட்டுள்ள, ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என, அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் நியமிக்கப்பட்டுள்ள குழு வழங்கிய அறிக்கையையே, உதய கம்மன்பில வெளியிட்டுள்ளார். இதனாலேயே, அரசாங்கம் இதனை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், இது தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு தெளிவுபடுத்தப்பட்டது.
இதன்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பில் பக்கச் சார்பற்ற முழுமையான விசாரணையை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதலை நடத்திய தரப்பினர் மற்றும் இத்தாக்குதல் தொடர்பில் ஏற்கனவே அறிந்திருந்தும் அதனை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காத தரப்பினர் ஆகியோர் தொடர்பில் புதிய அரசாங்கத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அமைச்சர்,
எந்த சந்தர்ப்பத்திலும் ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர ஆகியோரை பதவிகளிலிருந்து நீக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை. உதய கம்மன்பில வெளியிட்டுள்ள ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் தொடர்பான அறிக்கையில், மேற்படி அவ்விருவரையும் அவர் இலக்கு வைத்துள்ளமை தெரிய வருகிறது.பதவியிலிருந்து இவர்களை விலக்குவதற்கான தேவை காணப்படுவதாலேயே, இவர்களை, கம்மம்பில இலக்கு வைத்துள்ளார்.
எனினும் இவர்கள் இருவருமே ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டவர்களாவர். குண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் கூட, இவர்கள் இருவரும் பாரபட்சமற்ற விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை அறிவர்.
பல்வேறு தேவைகள் உள்ளோருக்கே இவர்களை பதவியிலிருந்து விலக்குவதற்கான அவசியம் காணப்படு வதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply