சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்து கொள்ளுவதற்கு அதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே சிறந்தது
சிறுபான்மை மக்களின் உரிமைகளை பாதுகாத்து கொள்ளுவதற்கு அதி நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையே சிறந்தது என கால் நடை வளர்ப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கமார்தீன் அப்துல் பைஸ் கடந்த ஞாயிற்றுக்கிழமை (லண்டன்) ரிபிசியில் நடைபெற்ற அரசியில் கலந்துரையாடலின் நிகழ்ச்சியின் போது தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் போன்ற கட்சிகள் அரசுக்கு ஆதரவு கொடுத்து பிரச்சனைகளை அனுக தவறியதன் காரணமாகவே சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்த இனவாத கட்சிகள் அரசுடன் இணைய வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கேட்கபட்ட போது ஒரு யுத்த களத்தில் ஜெனரல் சரத் பொன்சேகாவையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையையும் மோத விட்டால் அதில் ஜெனரல் சரத்பொன்சேகா வெற்றி பெறலாம். ஆனால் இது ஒரு அரசியல் களம் எனகின்ற போது சிங்கத்தின் குகைக்குள்ளும் புலிகளின் குகைக்குள்ளும பூனைக்கு குட்டியை கொண்டுபோய் விட்டது போன்றது ஜெனரல் சரத் பொன்சேகவின் நிலை என தெரிவித்தார்.
ஒரு தேர்தல் என்கின்ற போது எதிர்கட்சி வேட்பாளர் வெற்றி பெறுகின்ற நிலையை ஏற்படும்போது அவருக்கு ஆதரவான வெற்றி அலை வீசும் ஆனால் தன்னுடைய அனுபவத்தில் அப்படி ஒரு நிலையை அங்கு இல்லை எனவும் அதனுடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மீண்டும் வெற்றி பெறுவார் எனவும் உறுதிபட கூறினார் கால் நடை வளர்ப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கமார்தீன் அப்துல் பைஸ்.
அதேவேளை ஜெனரல் சரத்பொன்சேகா இனப்பிரச்சனைக்கு தீர்வாக 13வது அரசியல் அமைப்பு சட்டதிருத்திற்கு மேலாக செல்வதாக கூறுகிறார். ஆனால் அவரை ஆதரிக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி அதற்கு எதிராக இருக்கின்றது. அதன் தலைவர் சோமவன்ச அமரசிங்க ரிபிசியில் அதை கூறியுள்ளார், இப்படி இருக்கும் பொழுது இது எவ்வாறு சாத்தியம் என கேள்வி எழுப்பினார்.
அத்தோடு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மேற்குலக நாடுகளின் வேலை திட்டத்தின் கீழ் தனது அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும் தமது சொந்த சமூகத்தின் நலனிலோ அல்லது நாட்டின் அக்கரையிலே அது செயற்படவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.
சிறுபான்மை கட்சிகள் தமது மக்களின் நலனில் பாதுகாப்பில் அபிவிருத்தியில் அக்கரையுடன் செயற்படுவதாயின் அந்த அந்த பகுதியில் தமது அரசியல் செயற்பாடுகளை முன் எடுக்கவேண்டும் தவிர நாட்டின் ஏனைய பகுதிகளில் தமது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபாடுவது தமது சமூகத்தின் நலனுக்கு எந்தவித முன்னேற்றத்தையும் தராது என தெரிவித்தார்.
இரண்டு மணிநேரம் நடைபெற்ற இக் கலந்துரையாடலில் உலகின் பல பாகங்ளிலும் இருந்து பலநேயர்களின் கேள்விக்கு பதில்களை வழங்கிய கால் நடை வளர்ப்பு அபிவிருத்தி பிரதி அமைச்சர் கமார்தீன் அப்துல் பைஸ்யுடன் ரிபிசியின் ஜேர்மனிய அரசியல் ஆய்வாளர் செ. ஜெகநாதன் ரிபிசியின் பணிப்பாளர் வீ. இராமராஜ் ஆகியோரும் கலந்துரையாடினார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply