புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை : அமைச்சர் விஜித ஹேரத்
புதிய அரசாங்கம் இதுவரை பணம் அச்சிடவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அதேபோல், தாம் இதுவரை எந்தவொரு வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்தும் வெளிநாட்டுக் கடனைப் பெறவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இன்று (29) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பொதுவாக, புதிய திரைச்சேரி உண்டியல்கள் மற்றும் பத்திரங்கள் காலாவதியாகும் போது விகிதாசார முறையில் புதியவற்றை வெளியிடும் முறையை மத்திய வங்கி கொண்டுள்ளது. அந்த செயல்முறை தினமும் நடக்கும் ஒன்று. மேலும், பணம் அச்சிடுவதை எடுத்துக் கொண்டால், உண்மையில் புதிய பணம் எதுவும் அச்சிடப்படவில்லை, அதைச் செய்ய முடியாது. புதிய பணத்தை அச்சிட முடியாது என்பது தௌிவாக உள்ளது. நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் நாணயத்தாள் ஒன்றை பார்க்க எனக்கும் விருப்பம்தான். ஆனால் இதுவரை அது வெளியிடப்படவில்லை. இது முழுக்க முழுக்க பொய்யான செய்தி.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply