பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குங்கள் – 13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் – ஜனாதிபதி தேர்தலின் போது வழங்கிய வாக்குறுதிகளை திரும்பிப்பாருங்கள் : அனுரகுமாரவிற்கு மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் கடிதம்

ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டிருந்த முக்கிய வாக்குறுதிகள் குறித்து மீண்டும் அவரது கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் அவருக்கு கடிதமொன்றை எழுதியுள்ளது.

மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது.

2024 செப்டம்பர் ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னரான காலப்பகுதியிலும் நவம்பரில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலிற்கு முன்னதாகவும் உங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட முக்கிய வாக்குறுதிகள் குறித்து கவனத்தை ஈர்ப்பதற்காக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் இந்த கடிதத்தை எழுதுகின்றது.

இலங்கை தொடர்ந்தும் பல சவால்களை எதிர்கொண்டுள்ள ,மிக மோசமான பொருளாதார வன்முறைகள்; மற்றும் வன்முறைகளில் இருந்து மீண்டு மீட்சியை நோக்கி சென்றுகொண்டிருக்கின்ற சூழமைவில் உடனடியாக கவனம் செலுத்தப்படவேண்டிய முக்கிய விடயங்கள் குறி;த்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகின்றோம்.

2022 அரகலய இயக்கம் ஆட்சிமுறை மாற்றம்,ஊழலிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும், வெளிப்படைதன்மை ஆகியவற்றினை வெளிப்படுத்தியது.

இவை மக்களின் நம்பிக்கையை அழித்துள்ள விடயங்கள்.

இலங்கையில் காணப்படும் நிறைவேற்று அதிகாரம் ,அரசியலமயப்படுத்தப்பட்ட நிறுவனங்கள், மற்றும் தண்டனையின்மை கலாச்சாரம், போன்றவற்றை முடிவிற்கு கொண்டுவருவதற்காக நிர்வாக சீர்திருத்தங்களின் முக்கிய தேவையாக உள்ளதை மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையம் உட்பட ஏனைய அமைப்புகள் தொடர்ந்து சுட்டிக்காட்டிவந்துள்ளன.

அர்த்தபூர்வமான ஆட்சிமுறை சீர்திருத்தம்,நாட்டில் ஊழல் கலாச்சாரத்திற்கு எதிராக போராடவேண்டியதன் அவசியம்,நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல் உட்பட பொறுப்புக்கூறலை கொண்டுவருதல் போன்ற விடயங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது நீங்கள் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை நாங்கள் அறிந்துள்ளோம் அங்கீகரிக்கின்றோம்.

மேலும் சமீபத்தைய நிகழ்வுகள் இலங்கையின் வன்முறை மற்றும் பலவீனமான சமாதானங்கள் குறித்த அனுபவங்களை மீள நினைவுபடுத்துகின்றன.

மோதலிற்கான அடிப்படை காரணங்களிற்கு தொடர்ந்து வந்த ஆட்சியாளர்கள் தீர்வைகாண தவறியமை ஏற்கனவே காணப்படும் மோதல்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளதுடன் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது.

மேலும் இந்த நேரத்தில் 2024 ஒக்டோபரில் பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.இது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து நீங்கள் வெளியிட்ட முக்கியமான வாக்குறுதி குறித்த கரிசனையை ஏற்படுத்தியுள்ளது.

சவால்கள் அதிகரிக்கும் சூழ்நிலையில் ,நீங்கள் உங்கள் தேர்தல் விஞ்;ஞாபனத்தில் குறிப்பிடப்பட்ட வாக்குறுதிகளை திரும்பிபார்க்கவேண்டும், எனவும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளை வெளிப்படையான அனைவரையும் உள்வாங்கி முன்னெடுக்கவேண்டும் எனவும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

இந்த மாற்றங்களில் பலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான நடவடிக்கைகள் அவசியம் என்பதையும்,புதிய நாடாளுமன்றத்திலேயே இதனை முன்னெடுக்க முடியும் என்பதையும் நாங்கள் ஏற்றுக்கொள்கின்றோம்.

எனினும் அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகள் குறித்த உறுதி;ப்பாட்டை மீள உறுதி செய்யவேண்டும்.மேலும் புதிய நாடாளுமன்றம் இந்த சீர்திருத்தங்களை தாமதமின்றி முன்னெடுப்பதற்கான ஆயத்தவேலைகளை செய்யவேண்டும் என நாங்கள் வலியுறுத்துகி;ன்றோம்.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற சம்பவங்கள்-

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றமைக்கு அடையாளமாக விளங்குகின்ற நன்குஅறியப்பட்ட சம்பவங்கள் குறித்து வெளிப்படையான விசாரணைகளை மேற்கொள்வது பொதுமக்களின் நம்பிக்கையை மீள ஏற்படுத்துவதற்கு மிகவும் அவசியமான விடயம்.

இதில் உயிர்த்த ஞாயிறுதாக்குதல் உட்பட ஏனைய சம்பவங்கள் குறித்த விசாரணைகளை துரிதப்படுத்துதல் அடங்கும்.

நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறையை நீக்குதல்-

நிறைவேற்றதி;கார முறையை நீக்கவேண்டும் என நீண்டகாலமாக வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது, உங்கள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் கடைசி நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறை குறித்து குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த விடயத்தில் சீர்திருத்தங்களை ஆரம்பிப்பதற்கு நீங்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவேண்டும் என நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

13 வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவேண்டும்-

13 வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவது தேசிய இனப்பிரச்சினை மற்றும் இலங்கையின் சிறுபான்மையினர் மத்தியில் பல தசாப்தங்களாக நிலவும் துயரங்களை தீர்ப்பதற்கான அர்ப்பணிப்பை காண்பிப்பதற்கான முதல்படியாகும்.

தற்போதுள்ள அரசியலமைப்பு ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்துவது இனமத சிறுபான்மையினரின் நம்பிக்கைகளை மேம்படுத்துவதற்கு இன்றியமையாத முன்நிபந்தனை என்பதை நாங்கள் கவனத்தில் கொள்கின்றோம்.

சட்ட சீர்திருத்தம்

முன்மொழியப்பட்ட சட்டங்கள் மனித உரிமைதராதரங்களிற்கு ஏற்ப காணப்படுவதை உறுதி செய்யவும், சிறுபான்மையினத்தவர்களை பாதிக்கும் தவறான பயன்பாட்டிலிருந்து பாதுகாக்கவும்,சீர்திருத்தங்களை நாங்கள் கோருகின்றோம்.

பயங்கரவாத தடைச்சட்டம் இணையவழிபாதுகாப்பு சட்;டம் ஆகியவற்றை நீக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கின்றோம்,

கடந்த காலங்களில் வன்முறைகள் நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்ளுதல்

  • இலங்கை முழுவதிலும் உள்ள பாதிக்கப்பட்டவர்கள் உண்மை நீதியை தேடி மேற்கொண்டுள்ள நிலையில் அவர்களின் வேண்டுகோளிற்கு தீர்வை காண்பதற்கான நேர்மையான முயற்சிகள் அவசியம்.

பொறுப்புக்கூறல் தொடர்பான சுயாதீனமான நடவடிக்ககளை ஆரம்பித்தல் ,ஆழமாக வேரூன்றியுள்ள தண்டனையிலிருந்து விலக்களிக்கப்படும் கலாச்சாரத்தி;ற்கு முடிவை காண்பதற்காக உண்மையை தெரிவிக்கும் முயற்சிகளையும் முன்னெடுக்கவேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply