கடவுச்சீட்டு தட்டுப்பாடு விரைவில் முடிவுக்கு வரும்: திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான வெளிநாட்டு நிறுவனத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் 50,000 ‘பி’ தொடர் வெற்று கடவுச்சீட்டுகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் பெற்றுள்ளது. மேலும் 750,000 வெற்று கடவுச்சீட்டுகளை உரிய காலத்தில் திணைக்களம் பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஏறக்குறைய 100,000 கடவுச்சீட்டுகள் இம்மாத இறுதியிலும், 150,000 அடுத்த மாதத்திலும் பெற்றுக்கொள்ளப்படும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெற்று கடவுச்சீட்டுகளின் மற்றொரு இருப்புக்கான கொள்முதல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தற்போது நாளாந்தம் சுமார் 1,600 கடவுச்சீட்டுகளை வழங்குகின்றது.

கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கையை அடுத்த மாத தொடக்கத்தில் இருந்து அதிகரிக்க திணைக்களம் தீர்மானித்துள்ளது.

விண்ணப்பதாரர்கள் ஆவணங்களை ஒப்படைப்பதற்கான திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்வதற்கான ஒன்லைன் முறையை சரியான நேரத்தில் உருவாக்க குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply