குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்களின் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு குருநாகல் மாவட்டத்தில் பரகஹதெனிய ஜாமிஉல் அன்வர் பெரிய ஜும்மா பள்ளிவாசலில் அப்பாள்ளிவாசலின் நம்பிக்கையாளர்களின்‌ ஒத்துழைப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (03) நடைபெற்றது.

இந்செயலமர்வு முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.எஸ்.எம் நவாஸ் அவர்களின் தலைமைத்துவம் மற்றும் வழிகாட்டலின் கீழ் நடைபெற்றது

செயலமர்வில் சுமார் 200 பள்ளி வாசல்களின்‌ 600 க்கும் மேற்பட்ட நம்பிக்கையாளர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

இந்த கருத்தரங்கில் பள்ளிவாசல் நம்பிக்கையாளர்களின் பொறுப்புகள் மற்றும் கடமைகள், பள்ளிவாசல் எவ்வாறு ஒரு சமூக மையமாக செயற்படுவது, இலங்கை வக்பு சபை, இலங்கை வக்பு நியாய சபை மற்றும் முஸ்லிம் தரும நம்பிக்கை பொறுப்புகள் (Trust) ஆகியன தொடர்பில் அறிமுகம், குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பாடத்திட்டமும் எதிர்கால செயற்பாடுகளும், குர்ஆன் மத்ரஸா அறிமுகமும் அதன் முக்கியத்துவம் ஆகியன தொடர்பில் நம்பிக்கையாளர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.

முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அறிமுகமும் அதன் சேவைகள் தொடர்பான தொடக்க உரையை திணைக்களத்தின் பணிப்பாளர் M.S.M. நவாஸ் அவர்கள் நடாத்தினார்கள்.

இக் கருத்தரங்கில் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் சார்பாக வளவாளர்களாக அதன் உதவிப் பணிப்பாளர்களான M.S. அலா அஹ்மத், N. நிலோபர், வக்பு பிரிவின் அதிகாரி அஷ் ஷேக் M.I. முனீர், வக்பு நியாய சபை பதில் செயலாளர் M.N.M. ரோஸன், குர்ஆன் மத்ரஸாக்களுக்கான பொறுப்பதிகாரி அஷ் ஷேக் A.M. ரிஸ்மி ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுரைகளை வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக மாவத்தகம பிரதேச செயலாளர் . M.S. ஜானக அவர்கள் கலந்து கொண்டார்.

இக் கருத்தரங்கை குருநாகல் மாவட்ட முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள மாவட்ட பொறுப்பதிகாரி அஷ் ஷேக் T.M இஹ்ஸான் மரிக்கார், குருநாகல் மாவட்ட முஸ்லிம் கலாச்சார உத்தியோகத்தர்களான அஷ் ஷேக் M.M. ஐயூப், ஜனாப். M.N.M. சாஜித், திருமதி M.H.I. சப்மா மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் பிரதான காரியாலய வக்பு உத்தியோகத்தர் M.I.M. மிஸார் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தனர்.

மேலும் இச் செயலமர்வை எதிர்வரும் காலங்களில் இலங்கையின் அனைத்து மாவட்டங்களிலும் நடாத்த முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் தீர்மானித்து அதற்கான முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply