ஜனாதிபதி தேர்தல் ஜனநாயகத்திற்கான போராட்டம் பிரச்சாரத்தை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் நிறைவு செய்தார் செய்தார் கமலா ஹரிஸ்
அமெரிக்காவில் ஜனநாயக கட்சியின் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் கமலா ஹரிஸ் தனது இறுதி தேர்தல் பிரச்சார கூட்டத்தினை பெரும் உற்சாகத்துடனும் மகிழ்ச்சியுடனும் நிறைவு செய்துள்ளார். கமலா ஹரிஸ் 107 நாள் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தினை முன்னெடுத்திருந்தார். நவீன அரசியல் வரலாற்றில் மிகவும் குறுகிய நாட்கள் நீடித்த தேர்தல் பிரச்சாரம்.
ஜனாதிபதி ஜோ பைடன் தான் தேர்தல் போட்டியிலிருந்து விலகுகின்றேன் என ஒரு ஞாயிற்றுக்கிழமை தொலைபேசியில் தெரிவித்ததை தொடர்ந்து கமலா ஹரிசின் தேர்தல் பிரச்சாரம் ஆரம்பமாகியது.
பிலெடெல்பியாவில் அவர் தனது இறுதி தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.ஜனாதிபதி தேர்தலை அமெரிக்க ஜனநாயகத்திற்கான போராட்டமாக அவர் சித்தரித்தார்.
தனது தேர்தல் பிரச்சாரம் குறித்து நம்பிக்கையை ஏற்படுத் முயன்றார்.
நாங்கள் அன்று நம்பிக்கையுடன் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் ஆரம்பித்தது போன்று இன்றிரவு நாங்கள் நம்பிக்கையுடன் உற்சாகத்துடன் மகிழ்ச்சியுடன் பூர்த்தி செய்கின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு முந்தைய தலைமுறை சுதந்திரத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டது,தற்போது பட்டன் எங்களின் கரங்களில் உள்ளது நாங்கள் வாக்களிக்க செல்லவேண்டும் என கமலா ஹரிஸ் தனது உரையை நிறைவு செய்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply