இந்தோனேசியாவில் எரிமலை சீற்றம்
இந்தோனேசியவில் உள்ள லெவோடோபி லகி லகி எரிமலை வெடித்ததில், வீடுகள் எரிந்து 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தோனேசியாவில் உள்ள லெவோடோபி லகி லகி என்ற எரிமலையில் இருந்து தீக்குழம்பு வெளியேறுவதால், அப்பகுதியைச் சுற்றிலும் கரும்புகை சூழ்ந்தது.
எரிமலை சீற்றத்துடன் காணப்படுவதால் அங்கு வசித்து வந்த மக்களை பாதுகாப்பான பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் இந்த எரிமலையில், கறுப்பு நிற சாம்பல் 2000 மீட்டர் உயரத்துக்கு தூக்கி வீசப்பட்டு அது காற்றில் கலந்து வருகிறது. எரிமலைச் சாம்பல் காற்றால் அருகில் உள்ள கிராமங்கள் மீது விழுந்ததில், வீடுகள் எரிந்த நாசமாயின.
உள்ளூர் தகவல்கள், இதுவரை 9 பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், ஏராளமானோர், சிதைந்த வீடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என்றும் அஞ்சப்படுவதாகக் கூறப்படுகிறது.
கடந்த வாரத்திலிருந்து எரிமலை சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், கறுப்பு நிற சாம்பல் வெளியாகி வருகிறது.
இந்த எரிமலையைச் சுற்றிலும் 7 கிலோ மீட்டர் தொலைவு வரையுள்ள பகுதிகள் அபாயப் பகுதிகளாக எரிமலைச் சீற்றத்தை கண்காணிக்கும் குழு அறிவித்துள்ளது.
இந்த எரிமலைக்கு அருகே சுமார் 6 கிராமங்கள் இருப்பதாகவும் எரிமலை சீற்றத்தால் 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply