ஈரான் அணு விஞ்ஞானி கடத்தல்; அமெரிக்கா மீது சந்தேகம்
ஈரான் அணு விஞ்ஞானி ஷெஹ்ராம்அமிரி காணாமல்போனமைக்கு அமெரிக்காவே பொறுப்பேற்க வேண்டுமென ஈரான் கூறியதை அமெரிக்கா முற்றாக நிராகரித்துள்ளது. இது சம்பந்தமாக அமெரிக்கா விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஈரானின் குற்றச்சாட்டைப்பற்றி நாங்கள் கேள்வியுற்றோம்.
ஆனால் இதைப்பற்றி நாங்கள் எதுவும் கூறப்போவதில்லை. அவர்களின் (ஈரான்) விஞ்ஞானியைப் பற்றி எமக்கு எதுவுமே தெரியாதென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்கள அதிகாரி பிலிப்கிரெளலி இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டார். ஊடகவியலாளர்கள் பிலிப்கிரெளலியை காணாமல் போன ஈரான் விஞ்ஞானி சம்பந்தமாகக் கேள்விகளைக் கேட்டுக் குடைந்தெடுத்தனர். இதற்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஈரானின் அணு விஞ்ஞானி ஷெஹ்ராம்அமிரி சென்ற ஜூன் மாதம் புனிதக் கடமைக்காக (உம்ரா) சவூதி அரேபியா சென்றிருந்தார். இவர் சவூதி அரேபியா சென்று மூன்று நாட்களின் பின்னர் காணாமல் போனார். இவர் கடத்தப்பட்டிருக்கலாமெனக் கருதும் ஈரான் இக்கடத்தலை அமெரிக்காவே செய்ததாகக் குற்றம்சாட்டியது.
ஈரானில் அமைக்கப்படும் இரண்டாம் கட்ட யுரேனியம் செறியூட்டல் நிலையங்களை அமைக்கும் பணிகளில் விஞ்ஞானி ஷெஹ்ராம்அமிரியின் பங்கு முக்கியமான தென்பது குறிப்பிடத்தக்கதாகும்.
ஈரான் வெளிநாட்டமைச்சர் கடந்த செவ்வாய்கிழமை பாரசிக மொழியில் இக்குற்றச்சாட்டை சுமத்தினார். ஆங்கில அலை வரிசைத் தொலைக்காட்சி இதை மொழிமாற்றம் செய்து ஒளிபரப்பியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply