ரயில் – மோட்டார் சைக்கிள் மோதி விபத்து : தந்தை பலி மகன் காயம்
அநுராதபுரம், ஹபரணை, பெல்லன்கடவல பிரதேசத்தில் உள்ள ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் ஒன்று ரயிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் தந்தை உயிரிழந்துள்ளதுடன் மகன் காயமடைந்துள்ளதாக ஹபரணை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (15) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
அநுராதபுரம், கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயதுடைய தந்தையே உயிரிழந்துள்ளார்.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மகன் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலம் ஹபரணை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply