வவுனியா தாண்டிக்குளம் குளப்பகுதியில் மனிதக் கழிவுகளை வீச முற்பட்டவரை நையப்புடைத்த இளைஞர்கள்
வவுனியா தாண்டிக்குளம் குளப்பகுதியில் மனிதக் கழிவுகளை வீச முற்பட்ட நபர் ஒருவர் இளைஞர்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அந்த நபர் துவிச்சக்கரவண்டி ஒன்றில் மலர்ச்சாலையில் சடலங்களில் இருந்து அகற்றப்படும் கழிவுகள் கொண்ட பொதியுடன் தாண்டிக்குளம் குளத்துப் பகுதிக்குச் சென்றுள்ளார். அதனை தொடர்ச்சியாக அவதானித்து வந்த இளைஞர்கள் சிலர் அவரை மடக்கிப்பிடித்து நையப்புடைத்ததுடன், அந்த பகுதி கமக்காரர் அமைப்புக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
அதன் பின்னர், அங்கு சென்ற கமக்காரர் அமைப்பினரும் பொதுமக்களும் இவ்விடயம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவுக்கு தகவல் வழங்கினர்.
அதனையடுத்து, உரிய இடத்துக்குச் சென்ற பொலிஸார் அந்த நபரை கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல முற்பட்டனர்.
அவ்வேளை, அதற்கு மறுப்பு தெரிவித்த பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் மலர்ச்சாலையின் உரிமையாளர் வரும் வரையில் வாகனத்தை நகரவிடமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் குழப்பநிலை ஏற்பட்டது.
தொடர்ந்து, அப்பகுதிக்குச் சென்ற வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இச்சம்பவம் தொடர்பாக நீதியான விசாரணை செய்து சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதாக பொதுமக்களுக்கு உறுதியளித்தார். அதன் பிறகே, பொதுமக்கள் அந்த பகுதியிலிருந்து அகன்று சென்றனர்.
மேலும், மனிதக்கழிவுகளை வவுனியா கண்டி வீதிக்கு அண்மையில் உள்ள மலர்ச்சாலையொன்றில் இருந்தே எடுத்து வந்ததாக கைதான நபர் பொதுமக்களுக்கு தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட நபர் மனிதக்கழிவுப் பொதிகளுடன் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply