புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பம்

10வது நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நாடாளுமன்ற உறுப்பினர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று முதல் புதிய உறுப்பினர்கள் இணையத்தின் மூலம் பதிவு செய்யலாம் என நாடாளுமன்ற தகவல் தொடர்பு பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன், சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு தேவையான தகவல்களை அறிந்து கொள்வதற்காக எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இரண்டு தகவல் சாளரங்களை திறப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புதிதாக தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்ற முறைமை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பில் 3 நாள் செயலமர்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த செயலமர்வு 25, 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply