புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை பதவியேற்பு
இலங்கையின் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவையின் பதவிப்பிரமாண நிகழ்வு தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. குறித்த நிகழ்வானது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake ) முன்னிலையில் ஜனாதிபதி செயலகத்தில் காலை 10 மணிக்கு புதிய அமைச்சரவை அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு ஆரம்பமானது.
அதற்கமைய நிதி, பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் அமைச்சராக சமகால ஜனாதிபதி அநுகுமார திசாநாயக்க பதவியேற்றுள்ளார்.
கல்வி, தொழிற்கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சராக பிரதமர் ஹரினி அமரசூரிய பதவியேற்றுள்ளார்.
வெளிவிவகாரம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு, சுற்றுலாத்துறை அமைச்சராக விஜித ஹேரத் பதவியேற்றுள்ளார்.
பொது நிர்வாக, மாகாண சபை , உள்ளூராட்சி அமைச்சராக சந்தன அபேரத்ன மற்றும் நீதி மற்றும் சமூக ஒருமைப்பாடு அமைச்சராக ஹர்சன நாணயக்கார பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்
மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் பதவியேற்றுள்ளார்.
கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்பாசன அமைச்சராக லால் காந்த பதவியேற்றுள்ளார்.
நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சராக அநுர கருணாதிலக பதவியேற்றுள்ளார்.
கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சராக ராமலிங்கம் சந்திரசேகர் பதவியேற்றுள்ளார்.
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டுகை அமைச்சராக உபாலி பன்னிலகே பதவியேற்றுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply