உரிய காலத்துக்கு முன் உயர்தர பரீட்சை: அமைச்சர் ஹரிணிக்கு எதிராக மாணவி வழக்கு?

தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நடத்துவதைத் தடுக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்கக் கோரி மாணவியொருவர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுவை, டிசம்பர் 12ஆம் திகதி ஆராய்வதற்கு உயர் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (25) தீர்மானித்துள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, நீதியரசர்கள் முர்து பெர்னாண்டோ மற்றும் பிரியந்த பெர்னாண்டு ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வின் முன்னால் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவி ஹன்சனி அழககோன் தாக்கல் செய்த மனுவில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், கல்வி அமைச்சர் திருமதி ஹரிணி அமரசூரிய உள்ளிட்டோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர் தனது மனுவில், கல்விப் பொதுத் தராதர உயர்தரப் படிப்பு தொடர்பான 39/2023 சுற்றறிக்கையை மேற்கோள்காட்டி, 107 கல்வி நாட்கள் நிறைவடைந்த பின்னரே உயர்தரப் பரீட்சை நடத்த வேண்டும் என்ற விதிமுறையை சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இந்தக் கல்விக் காலத்தை பூர்த்தி செய்யும்முன் பரீட்சை நடத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply