பொதுமக்களுக்காக புதுப்பிக்கப்பட்ட இலங்கை பொலிஸின் உத்தியோகபூர்வ இணையத்தளம்
பொதுமக்களுக்கு உதவுவதற்கான முக்கிய அம்சங்களுக்கு இடமளிக்கும் வகையில் இலங்கை பொலிஸ் திணைக்களம் தனது உத்தியோகபூர்வ இணையத்தளத்தை புதுப்பித்துள்ளது. புதுப்பிக்கப்பட்ட இணையத்தளமான www.police.lk, பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் தலைமையில் நேற்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நடவடிக்கைகளின் உத்தியோகபூர்வ புதுப்பிப்புகளைப் பகிர்வதைத் தவிர, இந்த இணையதளம் பொதுமக்கள் புகார்களைத் தாக்கல் செய்யவும்,
பொலிஸ் அனுமதிப் பதிவுகளுக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும் அனுமதிக்கும்.
இந்த புதிய இணையத்தளத்தில் ஏனைய அம்சங்களையும் உள்ளடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply