இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களை தேடி ஜெனரல் சரத் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தேடுதல்

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக இராணுவ காவல்துறையினர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து கறுவாத்தோட்டம் புல்லர்ஸ் வீதியில் அமைந்துள்ள இராணுவப் படைத்தளபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் பொலிஸ் தேடுதல் இடம்பெற்றுள்ளது.

இராணுவ காவல்துறையினர் மற்றும் கறுவாத்தோட்ட காவல் நிலைய கான்ஸ்டபிள்கள் ஆகியோர் கூட்டாக இணைந்து இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்களைகத் தேடி இந்த சுற்றி வளைப்பு இடம்பெற்றதாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். சுமார் 150 காவல்துறை அதிகாரிகளினால் இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் இராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு இராணுவத்திலிருந்து தப்பியோடிய படைவீரர்கள் பாதுகாப்பு அளித்து வருவதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்த சுற்றி வளைப்பு தேடுதல் வேட்டை நடைபெற்றுள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத்திலிருந்து தப்பிச் சென்றவர்களுக்கு அடைக்கலம் வழங்கி வருவதாக இராணுவ காவல்துறையினர் காவல்நிலையத்தில் புகார்த் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply