முன்னாள் ஜனாதிபதியின் முக்கிய அரசியல் தீர்மானம்
ஐரோப்பாவுக்கு விஜயம் செய்திருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க கடந்த 10 ஆம் திகதி இரவு இலங்கை திரும்பியுள்ளார். இலங்கை திரும்பியுள்ள அவர் எதிர்வரும் நாட்களின் முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்திரிக்கா பண்டாரநாயக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யு.என்.பி. – ஜே.வி.பி கட்சிகளின் வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கக் கூடும் என சில இணையத்தளங்கள் ஆருடம் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply