ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் சார்பில் `லங்கா ராணி` அருளர்

இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்வதற்கான தினம் நெருங்கி வரும் நிலையில், தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுப்பது என்பதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒரு முடிவுக்கு வரமுடியாத நிலையில், ஈரோஸ் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான `லங்கா ராணி` அருளர் என்கிறழைக்கப்படும் ஏ. ஆர். அருட்பிரகாசம் தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளராக வரும் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுயேட்சையாகக் ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கினால் அரசாங்கத்துக்கு எதிராகத் தமிழ் மக்களின் வாக்கு பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதாகவே அமையுமென அக்கட்சியின் மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் சில தினங்களுக்கு முன்பு குற்றம் சுமத்தியுள்ளார். இந்நிலையில் `லங்கா ராணி` அருளரின் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களிடையே எந்தளவுக்கு ஆதரவு இருக்குமென தெரியவில்லை.

2005ல் நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது `லங்கா ராணி`அருளர் போட்டியிட முன்வந்த போதும் புலிகளின் மறைமுக அழுத்தங்கள் காரணமாக போட்டியிடுவதைத் தவிர்த்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply