தாய்லாந்தில் தடுக்கப்பட்ட ஆயுத விமானம் இலங்கைக்கு வரவில்லை
வடகொரியாவில் இருந்து ரஸ்யா தயாரிப்பான ஐ.எல்.76 இராணுவ சரக்கு விமானம் டொன் மியன்ங் விமானா நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரை இறங்கிய போது, தாய்லாந்து அதிகாரிகளினால் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், தாய்லாந்து ஊடகங்கள் அவ்விமானம் இலங்கை நோக்கி பயணித்ததாக வெளியிட்ட செய்திகளை தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் பணிப்பாளர் லக்ஸ்மன் ஹலுக்கல மறுத்துள்ளார்.
அமெரிக்க அதிகாரிகளின் தகவல்களை தொடர்ந்தே தாய்லாந்து காவல்துறையினர் விமானத்தை கைப்பற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனிடையே விமானத்தில் இருந்த ஆயுதங்களை தாய்லாந்து அதிகாரிகள் தரையிறக்கி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடகொரியாவில் இருந்து பயணித்து கொண்டிருந்த இராணுவ சரக்கு விமானம் தாய்லாந்தில் எரிபொருள் நிரப்புவதற்காக அனுமதி கோரியிருந்தது. அதனை தொடர்ந்தே தாய்லாந்து அதிகாரிகள் விமானத்தை கைப்பற்றியுள்ளனர். விமான சிப்பந்திகளில் ஒரு பெலரேசியன், நான்கு கசாகஸ்தான் நாட்டு சிப்பந்திகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில், இந்த விமானம் இலங்கை நோக்கி சென்றதாக வெளியான செய்தியை லச்மன் ஹலுக்கல முற்றாக நிராகரித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply