மகிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும்: நாடாளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி

தற்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆரம்பித்துள்ள அபிவிருத்தித் திட்டங்கள் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அது தமிழ் மக்களின் பிரச்சினையை தீர்ப்பதில் சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுவது பிரச்சினைகளை தீர்ப்பத்தில் சிக்கல்கள் எழக்கூடும்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றியீட்டினால் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு எளிதில் தீர்வு காண முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே. தங்கேஸ்வரி
தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் குறித்து பல கருத்துக்கள் நிலவிய போதிலும் இதுவரை இறுதி தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை. எவ்வாறாயினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்கள் எவரையும் களத்தில் இறக்காது எனவும் தங்கேஸ்வரி குறிப்பிட்டுள்ளார். இலங்கை தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply