போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது 

போதைப்பொருளுடன் வெளிநாட்டு பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் காலி பிரிவு அதிகாரிகளினால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபரிடம் இருந்து 4 கிராம் கொக்கெய்ன் மற்றும் 6 கிராம் நிறையுடைய 12 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முதற்கட்ட விசாரணைகளில் சந்தேக நபர் குறித்த போதைப்பொருட்களை தபால் மூலம் இலங்கைக்கு இறக்குமதி செய்து விநியோகித்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

38 வயதுடைய ஸ்​பெயின் நாட்டைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply