நமது நாட்டின் தற்போதைய சவால்களை சரியாக அடையாளம் கண்டு எதிர்காலத்தை வலுப்படுத்துவோம்

நமது தாய்நாடு தற்போது எதிர்கொள்ளும் சவால்களை சரியாக அடையாளம் கண்டு, அவற்றை வெற்றிகொள்ளத் தேவையான ஆற்றல், வலிமை மற்றும் தொலைநோக்குடன் செயல்பட புது வருடத்தில் நாம் அனைவரும் உறுதி பூண வேண்டும். இலங்கை தேசத்தை கட்டியெழுப்புவதற்கான திட்டத்தை நாம் மேலும் வலுப்படுத்த வேண்டும் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

புதுவருடத்தை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் வாழ்த்து செய்தியிலேயே அவர் மெற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அந்த வாழ்த்துச் செய்தியில்,

கடந்த காலத்தைப் போல குறுகிய இன, மத கருத்துக்களால் பிளவுபட்ட அரசியல் திட்டங்கள் மீண்டும் தலைதூக்காமல் இருப்பது மிக முக்கியம். அத்துடன் கடந்த நான்கு வருடங்களாக நாட்டு மக்கள் எதிர்கொண்ட நிச்சயமற்ற தன்மை, ஏமாற்றங்களை முடிவுக்கு கொண்டுவந்து, மக்கள் தாய்நாட்டில் தங்கியிருக்க ஏதுவான பொருளாதார, அரசியல், சமூக சூழலை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

இதில் நாம் செய்ய வேண்டியது அமைதியின்மையை இல்லாதொழித்து நிம்மதியை வெற்றி பெறச்செய்வதற்கான பாதையை சரியாக தெளிவுபடுத்திக் கொள்வதாகும். நாட்டு மக்கள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியால் சிதைந்துள்ள வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப புதிய பொருளாதார திட்டமும் செயல்முறையும் தேவை என்பது மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்தப்படுகிறது. எனவே, நாட்டின் எதிர்காலத்திற்காக அரசியல், சமூக மற்றும் பொருளாதார முன்னெடுப்புகளை வலுப்படுத்த புது வருடத்தில் அர்ப்பணிப்புடன் செயல்படுவோம் என தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply