டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதலை மேற்கொள்ளவேண்டுமா? ஆராய்ந்தார் பைடன்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் ஈரானின் அணுஉலைகள் மீது தாக்குதல்களை மேற்கொள்வது குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன்ஆராய்ந்துள்ளார்.

கடந்த மாதம் இடம்பெற்ற இரகசிய பேச்சுவார்த்தைகளின் போது வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுலிவன் பல்வேறு சாத்தியப்பாடுகளை முன்வைத்தார் என அமெரிக்க அதிகாரிகள் அக்சியோசிற்கு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க ஜனாதிபதி உறுதியான முடிவை எடுப்பதற்காக இந்த கூட்டத்தை கூட்டவில்லை மாறாக திட்டமிடுதலில் ஈடுபடுவதற்காக இந்த சந்திப்பில் ஈடுபட்டார் என விடயமறிந்த வட்டாரமொன்று தெரிவித்துள்ளது.

ஜனவரி 20 ம் திகதிக்கு முன்னர் அணுகுண்டை தயாரிப்பதற்கான முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டால் அமெரிக்கா எவ்வாறான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என ஜோபைடன் ஆராய்ந்துள்ளார்.

டிரம்ப் பதவியேற்பதற்கு முன்னர் ஈரானிற்கு எதிராக அவசரநடவடிக்கையை எடுக்கவேண்டிய தேவையுள்ளதா என கேள்வி எழுப்பியுள்ள பைடன் அணுவாயுதங்கள் குறித்து ஈரான் குறிப்pபிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளதா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரானின் அணுவாயுத நிலைகள் மீது தாக்குதலை மேற்கொள்வது குறித்து ஜோபைடன் உறுதியான முடிவை எடுக்கவில்லை,வெள்ளை மாளிகை இது குறித்து தற்போது ஆராயவில்லை என அமெரிக்க அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply