இலங்கையின் வரி வருமானம் 25 வீதம் அதிகரிப்பு : வெளியானது தகவல்
இலங்கையின் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் 2024 ஆம் ஆண்டில் 1,958.08 பில்லியன் ரூபாவைச் சேகரித்துள்ளது. இது 2023ஆம் ஆண்டில் 1,565 மில்லியனிலிருந்துடன், 25.1 சதவீதம் வளர்ச்சியை பதிவுசெய்துள்ளது. வருமான வரி மற்றும் பெறுமதி சேர்ப்பு வரி மூலம் அதிக வருமானம் கிடைத்துள்ளதாக திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலி சந்திரசேகர தெரிவித்துள்ளார்.
இறைவரித் திணைக்களம் 1,023.2 மில்லியன் ரூபாவை வருமான வரியாக கடந்த ஆண்டு வசூலித்துள்ளது. இது 2023 இல் 911.097 மில்லியனாக இருந்தது.
2023இல் 469.1 பில்லியன் ரூபாவிலிருந்து பெறுமதி சேர் வரி வருமானம் 2024இல் 714.68 பில்லியனாக அதிகரித்துள்ளது.
பந்தயம் மற்றும் சூதாட்ட வரி வசூல் 7,422 மில்லியன் ரூபாயில் இருந்து 2024 இல் 14,923 மில்லியனாக அதிகரித்துள்ளது. இது இரட்டிப்பு அதிகரிப்பாகும்.
2023 இல் 2,478 மில்லியனாக இருந்த பங்குச் சந்தை பரிவர்த்தனை வரி 3,128 மில்லியனையாக அதிகரித்துள்ளது.
2024 இல் 1,500 பில்லியன் ரூபாவை வசூலித்ததாக இலங்கையின் சுங்கம் கூறியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply