இன்று நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இன்று வெள்ளிக்கிழமை களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜரானார். கந்த 2021 ஆம் ஆண்டு இராஜாங்க அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழு தலைவராகவும், பதவி வகித்த வேளையில், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ்ஜை அச்சுறுத்தியதாக முறைப்பாடு செய்யப்பட்டது.

காணி தொடர்பாக தொலைபேசி மூலமாக ஏற்படுத்திக் கொண்ட உரையாடலின் போது அச்சுறுத்தல் விடுத்ததாக, காணி ஆணையாளர் தொடுத்த வழக்கிலேயே, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் இன்றைய தினம் நீதிமன்றில் ஆஜராகி இருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply