இலங்கையின் பத்து மாவட்டங்களில் 56 வீதமான குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையால் பாதிப்பு பட்டினி நிலை ஆய்வில் தகவல்
லங்கையின் பத்து மாவட்டங்களில் 56 வீதமான குடும்பங்கள் உணவுப்பாதுகாப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளமையும்,ஒரளவு அல்லது மோசமான பட்டினிநிலையில் சிக்குண்டுள்ளமையும் ஆய்வொன்றின் போது தெரியவந்துள்ளது. பியான் FIAN என்ற அமைப்பு முன்னெடுத்த ஆய்வின்போது இது தெரியவந்துள்ளது.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பத்து மாவட்டங்களில் 2019ம் ஆண்டின் பின்னர் பணவீக்கம் காரணமாக குடும்பங்களின் வருமானம் குறிப்பிடத்தக்க அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளமையும்,சாராசரி மாதவருமானம் 49580 ஆக காணப்படுவதும் ஆய்வின்போது போது தெரியவந்துள்ளது.
2019 இல் சராசரிமாதவருமானம் 78,414 ஆக காணப்பட்டது.
இந்த மாவட்டங்களில் மூன்றில் இரண்டு குடும்பங்கள் வருமானம் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளன எனதெரிவித்துள்ள பியான் அமைப்பின் திட்ட ஒருங்கிணைப்பாளர் செஹாரி விஜயசிங்க,மூன்றில் இரண்டு குடும்பங்கள் 25 வீதமான வருமானத்தை இழந்துள்ளன,மேலும் பெருமளவு குடும்பங்கள் தங்கள் உணவுபழக்கத்தை மாற்றியுள்ளன,நிதி நெருக்கடி காரணமாக ஊட்டச்சத்து குறைவான மலிவான உணவை உட்கொள்கின்றன என அவர் தெரிவித்துள்ளார்.
அனேகமான குடும்பங்கள் (57.8 வீதம்) சிறிய அளவிலேயே உணவுப்பொருட்களை கொள்வனவு செய்கின்றன என தெரிவித்துள்ள அவர் 32 வீதமான குடும்பங்கள் உணவு செலவிற்காக உறவினர்கள் நண்பர்களிடமிருந்து பணத்தை பெறுகின்றனர் என தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply