பேருந்து விபத்து – 12 பேர் காயம்
கொழும்பிலிருந்து பசறை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்று பசறையில் உள்ள 15வது தூண் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சாரதி தூங்கியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
பேருந்து வீதியை விட்டு விலகி முன்பக்க பகுதி பள்ளத்தை நோக்கி வழுக்கிச் சென்று நின்றுள்ளதாக எங்கள் செய்தியாளர் தெரிவித்தார். விபத்தில் காயமடைந்த 13 பேர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்து இன்று (11) காலை 6.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply