சுற்றுச்சூழலுக்கு உகந்தவற்றை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை
அடுத்த இரண்டு வருடங்களில், பசுமை எரிசக்தி கருத்தை அடிப்படையாகக் கொண்டு, தேசிய அடையாளத்தைப் பாதுகாத்து உற்பத்தி செய்யப்படும் பல சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கடந்த 10 ஆம் திகதி மருதானையில் உள்ள VEGA இன்னோவேஷன்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி செயல்முறையை ஆய்வு செய்ய சென்றிருந்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
உலகின் மூன்றாவது வேகமான மின்சார காராகக் கருதப்படும் VEGA மின்சார காரை, VEGA இன்னோவேஷன்ஸ் உருவாக்கியுள்ளது.
100% உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சார முச்சக்கர வண்டிகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட பிற தயாரிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு உகந்த தயாரிப்புகளை ஊக்குவிப்பதற்கான தடைகளை நீக்க கொள்கை முடிவுகளை எடுக்க அரசாங்கம் தயங்காது என்றும் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply