ஆய்வுக் கப்பல்களுக்கான புதிய விதிகளுடன் செவ்வாய் சீனா செல்கிறார் ஜனாதிபதி அநுர
ஐனாதிபதி அநுரகுமார திசாநாயக்க செவ்வாய்க்கிழமை (14) பொங்கல் தினத்தன்று சீனாவுக்கு விஜயம் செய்ய உள்ளார். வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் போக்குவரத்து, நெடுஞ்சாலை, துறைமுகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உட்பட அரச அதிகாரிகள் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர்.
அத்துடன் சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், பிரதமர் லி கியாங், வெளிவிவகார அமைச்சர் வோங் யீ, சீன பதசிய மக்கள் காங்கிரஸின் தற்போதைய நிழலக் குழுவின் தழலவர் ஜாஓ லெர்ஜி மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் அட்மிரல் டோங் ஜுன் உட்பட சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரையும் பெய்ஜிங்கில் சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான குழுவினர் பங்கேற்க உள்ளனர்.
ஜனாதிபதி அநுரவின் இரண்டாவது உத்தியோகபூர்வ விஜயமாக சீன அமைந்துள்ள நிலையில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. சீன விஜயத்தில் மிகவும் முக்கியமான பல விடயங்கள் உள்ளன. அதில் மிகவும் முக்கியமானது ஏனெனில், இந்தியப் பெருங்கடலில் சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் நுழைவது தொடர்பானதாகும். இதற்கான பதிலுடனேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனா செல்வதுடன், இலங்கை எதிர்பார்த்தை விட பல உதவி திட்டங்கள் கிடைக்கப்பெறவுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர் ஒருவர் குறிப்பிட்டார்.
இலங்கை அரசு ‘ஒரே சீனாக் கொள்கையை’ தொடர்ச்சியாகக் கடைப்பிடித்தல், சீனா ஊடகக் குழுமம் மற்றும் இலங்கை சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம், சீனா சுங்கக் கட்டுப்பாட்டு நிறுவனத்தின் இடையீட்டில் இலங்கையிலிருந்து கோழி இறைச்சி சீனாவுக்கு ஏற்றுமதி ஒப்பந்தம், இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் சிறியளவிலான மீனவர்களுக்கு 35.7 மில்லியன் யுவான்கள் செலவில் சீன உதவிகள், சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சு மற்றும் சீனா மக்கள் குடியரசு ஊடக நிறுவனத்திற்கும் இடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஆகியவை ஏற்கனவே முழுமைப் படுத்தப்பட்டுள்ளன.
சீன – இலங்கை சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், துறைமுக நகர் முதலீடுகள், ஹம்பாந்தோட்டையில் உத்தேசிக்கப்படுகின்ற எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சீன கப்பல் விஜயங்கள் உட்பட மேலும் சில விடயங்கள் தொடர்பில் பெய்ஜிங் பேச்சுவார்த்தைகளின் போது தீர்மானிக்கப்பட உள்ளன. எனினும், சீன ஆராய்ச்சிக் கப்பல்கள் தொடர்பான விடயத்தில் திருத்தப்பட்ட நிலையான மூலோபாய ஒத்துழைப்பு விதிமுறையுடனேயே ஜனாதிபதி அநுர சீனாவுக்கு செல்கிறார்.
இலங்கைக்கு மாத்திரமன்றி ஏனைய சர்வதேச நாடுகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் இந்த சீன ஆய்வுக் கப்பல்கள் இந்தியப் பெருங்கடலுக்குள் பிரவேசிப்பது தொடர்பான வழிமுறைகள் புதிய திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. எனினும் அவை எவை என அரசாங்கம் வெளிப்படுத்த வில்லை. சீனா விஜயத்தின் பின்னர் வெளிப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. ஆனால் தமது ஆய்வுக் கப்பல்களை இலங்கை கடற்பரப்பிற்கு மேலும் அனுப்ப வேண்டும் என்ற நிலைப்பாட்டில் சீனா உறுதியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply