நிரம்பி வழியும் 27 நீர்த்தேக்கங்கள்

73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

அம்பாறையில் உள்ள மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏழு நீர்த்தேக்கங்களில் மூன்று நீர்த்தேக்கங்களும் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளன.

காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று நிரம்பி வழியும் நிலையில் உள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply