தெவினுவர பகுதியில் துப்பாக்கிச் சூடு மயிரிழையில் உயிர் தப்பிய தொழிலதிபர்
தெவினுவர, தல்பாவில பகுதியில் உலர் பொருட்கள் விற்பனை செய்யும் வர்த்தகர் ஒருவரை குறிவைத்து நேற்று (12) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.45 மணியளவில் இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளது.
உலர்ந்த மீன்களை வாங்க விரும்புவதாகக் கூறி தொழிலதிபரை ஏமாற்றி துப்பாக்கிதாரிகள் கேட்டைத் திறந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேட்டை திறந்ததும் துப்பாக்கிச் சுடு நடத்தப்பட்டுள்ளது. எனினும், தொழிலதிபர் ஒரு கீறல் கூட இல்லாமல் தப்பியுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் துப்பாக்கியால் சுடும் காட்சிகளையும், சுடத் தவறியதையும், பின்னர் தொழிலதிபரை துரத்துவதையும், துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு காலி தோட்டாவை எடுத்துச் செல்வதையும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளன.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply