துயரத்துடனும் நம்பிக்கையுடனும்-காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு கசப்பும் இனிப்பும் கலந்த ஒரு நாள்
இஸ்ரேலிற்கும் ஹமாசிற்கும் இடையிலான யுத்த நிறுத்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து காசா நகரில் உள்ளபாலஸ்தீனியர்கள் மகிழ்ச்சியையும் துயரத்தினையும் வெளிப்படுத்திவருகின்றனர்.
நான் மிகவும் மகிழ்ச்சியாகயிருக்கின்றேன் அதேவேளை எனது வீடு முற்றாக அழிந்துவிட்டது,நான் எனது நான்கு பிள்ளைகளை பறிகொடுத்துள்ளேன் சில பிள்ளைகளை பல மாதங்களாக பார்க்கவில்லை என பெய்ட் லஹியாவை சேர்ந்த ஜவ்ஹர் அபி லைலா என்ற பெண் தெரிவித்துள்ளார்.
யுத்த நிறுத்தம் காரணமாக எனது பிள்ளைகளை மீண்டும் பார்க்க முடியும் அதனால் மகிழ்ச்சியாக உள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாங்கள் பெரும்துயரங்களை சந்தித்தோம் நாங்கள் முற்றாக களைப்படைந்துபோனோம் ஆனாலும் உயிர்தப்பினோம்,என தெரிவித்துள்ள அவர் நான் நொருங்கிய இதயத்துடனேயே வீடு திரும்புவேன் என தெரிவித்துள்ளார்.
யுத்தநிறுத்த உடன்படிக்கை குறித்த செய்தி தனக்கு நம்பிக்கையையும் வேதனையும் ஏற்படுத்தியதாக பெயர் குறிப்பிடவிரும்பாத பாலஸ்தீனியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நாங்கள் இழந்த விடயங்கள் துயரத்தை ஏற்படுத்துகின்றன, குடும்பங்கள் உறவினர்கள் நண்பர்கள்,காசாவிற்குமீண்டும் திரும்பலாம் எங்கள் பகுதிகளிற்கு மீண்டும் திரும்பலாம் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
சுஜயாவிலிருந்து இடம்பெயர்ந்த பெயர் குறிப்பிடாத பாலஸ்தீனியர் ஒருவர் நாங்கள் மகிழ்ச்சியடைந்துள்ளோம் ஆனால் இந்த மகிழ்ச்சி முழுமையானது இல்லை என தெரிவித்துள்ளார்.
நான் எனது தந்தையையும் சகோதரியையும் இழந்தேன் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகுவே இதற்கு காரணம்,நாங்கள் எங்கு சென்று வாழப்போகின்றோம்,நான் வீட்டிற்கு சென்று ஒருவருடமாகின்றது மனிதாபிமான உதவிகள் வரும் என நம்புகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply