நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மண்சரிவு தொடர்பான முன்னெச்சரிக்கை அறிவிப்பை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது. குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (19) காலை 8.00 மணி முதல் நாளை திங்கட்கிழமை காலை 8.00 மணி வரை அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர, மாத்தளை மாவட்டத்தின் யடவத்த, உக்குவெல , ரத்தோட்ட, வில்கமுவ ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பதுளை மாவட்டத்தின் பசறை, ஹாலிஎல பகுதிகளும் கண்டி மாவட்டத்தின் மெததும்பர, பாத்ததும்பர பகுதிகளும் குருநாகல் மாவட்டத்தின் ரிதிகம பகுதியும் மாத்தளை மாவட்டத்தின் லக்கல பல்லேகம, அம்பன்கங்கை கோராலய, பல்லேபொல, மாத்தளை மற்றும் நாவுல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply