ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தின் முடிவு தனிப்பட்டது

இலங்கையில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் சுயேச்சையாக போட்டியிட எடுத்துள்ள முடிவு அவரது தனிப்பட்ட முடிவு என்றும் ரெலோ அமைப்பின் முடிவு அல்ல என்றும் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்னமும் தமது முடிவை வெளிப்படுத்தாமல் இருப்பது தமிழ் மக்களிடையே ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் செல்வம் அடைக்கலநாதன் கூறுகிறார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இது தொடர்பிலான முடிவை எடுப்பதில் காலதாமதமாவது தமிழ் மக்களை சங்கடப்படுத்தும் நிலைக்கு தள்ளும் என்று தான் கருதுவதாகவும் அந்தக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் டெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் கருத்து வெளியிட்டுள்ளார்.

இம்மாதம் 19 ஆம் அல்லது 20 ஆம் தேதி ஜனாதிபதி தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் வெளியிடக்கூடும் என்றும் அவர் கூறுகிறார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply