அடை மழை காரணமாக வடக்கு, கிழக்கில் 93,000 குடும்பங்கள் பாதிப்பு

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கடந்த சில தினங்களாகப் பெய்த அடை மழை காரணமாக 92 ஆயிரத்து 944 குடும்பங்களைச் சேர்ந்த 3 இலட்சத்து 30 ஆயிரத்து 584 பேர் பாதிக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் மாவட்ட இணைப்பாளர்கள் நேற்று தெரிவித்தனர்.

இந்த அடைமழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலையினால் 1286 குடும்பங்களைச் சேர்ந்த 5610 பேர் இடம்பெயர்ந்து மத வழிபாட்டுத் தளங்களிலும், பொது இடங்களிலும் தங்கி இருப்பதாகவும் அவர்கள் கூறினர்.

இந்த அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள நிலைகளில் 125 வீடுகள் முழுமையாக அழிவுற்றுள் ளதுடன், 958 வீடுகள் பகுதியாக சேதமடைந்திருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இம் மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தினால் இடம்பெயர்ந்து ள்ள மக்கள் மத வழிபாட்டுத் தலங்களிலும் பொது இடங்களிலும் தங்கியுள்ளனர். இவர்களுக்கு சமைத்த உணவு நிவாரணம் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினர்.

கிழக்கு மாகாணத்தில் வெள்ளம் வடிவதாகவும் குறிப்பிட்டனர்.

இதேவேளை திருகோணமலை யிலிருந்து 400 கிலோ மீட்டர் தூரத்தில் வங்காள விரிகுடாவில் கடந்த வாரம் உருவான தாழமுக்கமான வார்ட் முழுமையாக வலுவிழந்துவிட்டது என்றாலும், அதன் தாக்கம் காரண மாக அடுத்துவரும் இரண்டொரு தினங்க ளுக்கு வடபகுதியில் இடிமின்ன லுடன் அடிக்கடி மழை பெய்யும் என்று வானிலை அவதான நிலையத்தின் வானிலையாளர் தமயந்தி இந்தி ஹெட்டிஹேவகே கூறினார்.

வடபகுதி தவிர்ந்த ஏனைய பிரதேசங் களில் மாலை வேளையில் மழை பெய்ய முடியும். வடக்கு, கிழக்கு, வடமேற்கு மன்னார் குடா கடல் பரப்பு கொந்தளிப்பாகக் காணப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாக அனர்த்த முகாமை த்துவ நிலையத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கே. விமல ராஜா கூறுகையில், மட்டு மாவட்டத்தில் சுமார் 85 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 3 இலட்சம் பேர் பாதிக்கப்பட் டுள்ளனர்.

இவர்களில் வாகரை பிரதேச செயலக பிரிவைச் சேர்ந்த 300 குடும்பங் களும், வெல்லாவெளி பிரதேச செய லகப் பிரிவைச் சேர்ந்த 50 குடும்பங் களும் இருப்பிடங்களை விட்டு இடம்பெயர்ந்து ஐந்து பொது இடங்களில் தங்கியுள்ளனர்.

இதேநேரம், இம்மழை காரணமாக இம்மாவட்டத்தில் 60 வீடுகள் முழுமையாகவும், 400 வீடுகள் பகுதியா கவும் சேதமடைந்துள்ளன என்றார்.

திருமலை மாவட்ட இணைப்பாளர் எம். எஸ். எம். ரிஸ்வி குறிப்பிடுகையில், திருமலை மாவட்டத்தில் 6417 குடும் பங்களைச் சேர்ந்த 25084 பேர் பாதிக்கப் பட்டுள்ளனர். இவர்களில் கிண்ணியா, மூதூர், பட்டணமும், சூழலும், குச்சவெளி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளைச் சேர்ந்த 575 குடும்பங்களைச் சேர்ந்த 2137 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இம்மாவட்டத்தில் 18 வீடுகள் முழுமையாகவும், 278 வீடுகள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன என்றார்.

அம்பாறை மாவட்டத்தில் 1133 குடும் பங்களைச் சேர்ந்த 4085 பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். இங்கு 40 வீடுகள் முழுமையாகவும், 275 வீடுகள் பகுதியா கவும் சேதமடைந்துள்ளன என்று அம்பாறை மாவட்ட செயலாளர் சுனில் கன்னங்கர கூறினார்.

இம்மழை காரணமாக யாழ். மாவட் டத்தின் 394 குடும்பங்களைச் சேர்ந்த 1395 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் 361 குடும்பங்களைச் சேர்ந்த 1273 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். இம்மழையினால் தெள்ளிப்பளை மற் றும் மரு தங்கேணி பிரதேச செயலகப் பகுதி மக்களே பெரிதும் பாதிக்கப் பட்டிருப்பதாக யாழ். மாவட்ட இணைப் பாளர் கூறினார்.

இம் மாவட்டத்தில் 7 வீடுகள் முழு மையாகவும், 5 வீடுகள் பகுதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத் தால் சேதமடைந்துள்ள வீடுகளின் விபரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

வெள்ளம் படிப்படியாக வடிய ஆரம் பித்துள்ளதால் வீதிகளில் மற்றும் மட்டக்களப்பு -கல்முனை வீதி, பொலன றுவை – மட்டக்களப்பு வீதிகளில் ஏற்பட்ட வாகன போக்குவரத்து சிரமம் நேற்று ஓரளவு சுமுக நிலை காணப்பட்டது.

வெள்ளத்தால் இடம்பெயர்ந்து பொது இடங்களிலும் மற்றும் முகாம் களிலும் தங்கியுள்ள குடும்பங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கு மாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எஸ். அருமைநாயகம் பிரதேச செயலாளர் களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சுமார் 50 விளையாட்டு மைதானங்களும் வெள்ளத்துள் மூழ்கியுள்ளன.

யுத்தத்தால் இடம்பெயர்ந்து மீள்குடி யேறிய மக்கள் வாழும் பகுதிகளான கொக்கொட்டிச்சோலை, வவுணதீவு, வெல்லாவெளி, செங்கலடி பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான் கரைப் பிரதேசத்தின், போரதீவுப்பற்று பிரதேச செயலகப் பிரிவின், பல கிரா மங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ள துடன், பலர் பாம்புக்கடிக்கு இலக் காகியுள்ளனர்.

விசப்பாம்புக் கடிக்கு இலக்காகி இருவர் விபத்துச் சேனையில் இருந்தும் ஒருவர் காக்காச்சிவட்டையில் இருந்தும், மண்டூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப் பட்டதாக போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளர் சிறி தெரிவித்தார். கிராமங்களுக்கு என்ஜின் படகு மூலம் சென்ற செயலாளர், பாம்புக்கடிக்கு இலக்கானோரை வைத்தியசாலைக்கக் கொண்டுசென்றார்.

இம்மழையினால் வடமராட்சிப் பகுதி யில் உள்ள பருத்தித்துறை – யாழ்ப்பாணம் பிரதான வீதியில் ஆங்காங்கே வெள்ளம் மூடி இருந்தது. இதனால் போக்குவரத்துகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.

கடும்மழை காரணமாக இ.போ.ச. பஸ், சிற்றூழியர் சேவைகள் அனைத்தும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெற்றன.

கடும்மழை, வெள்ளம் காரணமாக அண்மையில் பயிரிடப்பட்ட புகையிலை, வெங்காயப் பயிர்கள் அழிந்து. இதனால் இப்பகுதி விவசாயிகளுக்கு பல நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply