தேர்தலை அமைதியாக நடத்த அனைவரும் ஒத்துழையுங்கள்

நாட்டின் உன்னதமான பதவியாகிய ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தல் இதுவாகையால் நீதியும் நேர்மையும், அமைதியுமான தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமென தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திசாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுள்ள 88 வீதமானோருக்கு தேசிய அடையாள அட்டைகள் உள்ளன. ஏனை யோருக்கும் தற்காலிக அடையாள அட்டையினை வழங்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மேலும் அவர் தெரிவித்தார்.

அண்மைக் காலமாக இது தொடர்பில் சில ஊடகங்கள் வெளியிட்ட தகவல்களை முற்றாக நிராகரித்த அவர், அத்தகவல்கள் தவறானவை எனவும் வாக்களிக்கத் தகுதியுள்ள நாட்டின் சகல பிரஜைகளுக்கும் அதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

நாட்டின் உன்னதமான பதவியாகிய ஜனாதிபதிப் பதவிக்கான தேர்தல் இதுவாகையால் நீதியும் நேர்மையும், அமைதியுமான தேர்தலொன்றை நடத்துவதற்குச் சகலரதும் பூரண ஒத்துழைப்பு அவசியமெனத் தெரிவித்த அவர், வன்முறைகள், குழப்பங்கள் இல்லாத தேர்தலாக இத்தேர்தல் அமைவதிலும் சம்பந்தப்பட்ட சகலரும் பூரண கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். எதிர்வரும் ஜனவரி 26ம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் ஆறாவது ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் செயலகத்தில் இடம்பெற்றது.

மேற்படி வேட்புமனுத் தாக்கலையடுத்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் மாநாட்டில் விளக்கமளிக்கும் போதே தேர்தல் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் :-

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 40 இலட்சம் பேர் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளதுடன் நாடளாவிய ரீதியில் 14,000 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

வடக்கில் இடம்பெயர்ந்தோர் தங்கியுள்ள நலன்புரி நிலையப் பகுதிகளில் கொத்தணி வாக்குச் சாவடிகளை அமைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பு நிலையங்களை அமைப்பது தொடர்பில் நாளை பேச்சுவார்த்தையொன்றை நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப் பேச்சுவார்த்தைக்கு வடக்கின் சகல மாவட்டச் செயலாளர்களும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் கலந்தாலோசித்து வாக்களிப்பு சம்பந்தமான விடயங்கள் பற்றி முடிவு செய்யப்படும்.

வழமைபோன்றே இம்முறையும் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்கு தேசிய, சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். ஆசிய நாடுகளைக் கொண்ட கண்காணிப்புக் குழுவும், ஐரோப்பிய யூனியன் கண்காணிப்புக் குழுவும் இதற்கான இணக்கத்தைத் தெரிவித்துள்ளதுடன் ஐக்கிய நாடுகள் சபையின் தேர்தல் கண்காணிப்புக் குழுவின் வருகை தொடர்பில் இதுவரை முடிவு கிடைக்கவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply