மித்தெனிய முக்கொலைச் சம்பவம் : துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற ஒருவர் கைது
மித்தெனிய பகுதியில் நடந்த மூன்று கொலை சம்பவத்தின் முக்கிய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு (BIA) வந்திருந்த போது குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த படுகொலைச் சம்பவம் கடந்த மாதம் 18ஆம் திகதி மித்தெனியவில் பதிவாகியுள்ளன. சந்தேக நபர் கட்டுவான, அகுலந்தெனிய பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இன்று காலை 8:15 மணிக்கு துபாய்க்கு புறப்பட்ட எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் EK-653 விமானத்தில் ஏறுவதற்காக அவர் விமான நிலையத்திற்கு வந்திருந்தார்.
விமான நிலைய குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்ட பின்னர், மித்தெனிய பொலிஸ் சிறப்பு அதிகாரிகள் குழு விமான நிலையத்திற்கு வந்து மேலதிக விசாரணைகளுக்காக அவரைக் காவலில் எடுத்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply