கிளிநொச்சி மாவட்டத்தில் 671 பேர் மீள்குடியேற்றம்

வவுனியாவில் நண்பர்கள் உறவினர் வீடுகளில் தங்கியிருந்த கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 280 குடும்பங்களைச் சேர்ந்த 671 பேர் வெள்ளி மற்றும் சனி கிழமை அவர்களுடைய இடங்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர் என கிளிநொச்சி மாவட்ட திட்டப்பணிப்பாளர் ஐ. கேதீஸ்வரன் தெரிவித்தார்.

உதயநகர் கிழக்கு, மேற்கு, உருத்திரபுரம், ஜெயந்திநகர், பெரியபரந்தன், கனபுரம், திருநகர் வடக்கு தெற்கு பிரதேசங்களை உள்ளடக்கிய 128 குடும்ங்களைச் சேர்ந்த 286 பேர் வெள்ளிக்கிழமை அனுப்பிவைக்கப்பட்டனர்.

இவர்கள் வவுனியாவில் நண்பர்கள் உறவினர்கள் வீடுகளில் தங்கியிருந்தவர்கள் `வடக்கு வசந்தம்’ வேலைத்திட்டத்தின் கீழ் சொந்த இடங்களில் மீள்குடியேற்றத்திட்டத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

பயணிகள் பஸ்களிலும், இவர்களுடைய உடமைகள் லொறிகளிலும், அனுப்பிவைக்கப்பட்டது என திட்டப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார். சனிக்கிழமை மேலும் ஒரு தொகுதியினர் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த இடங்களான முழங்காவில் இரணை தீவு, நாச்சிகுடா, ஜெயபுரம் வடக்கு தெற்கு கிராஞ்சி, பல்லவராயன்கட்டு பொன்னாவெளி, நல்லூர், கரியாலைநாகபடுவான் ஆகிய இடங்களைச் சேர்ந்த 152 குடும்பத்தினர் 265 பேர் அனுப்பிவைக்கப்பட்டனர்.

கிளிநொச்சி மத்திய மகாவித்தியாலயத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்படும் இவர்கள், மீள்குடியேற்ற கிராமங்களுக்கு அழைத்து செல்லப்படுவர் எனவும் கிளிநொச்சி மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது. அடுத்த வாரம் மெனிக்பாமில் தங்கியுள்ள ஆயிரம் பேர் மீள்குடியேற்றத்திற்கு கிளிநொச்சிக்கு அழைத்து செல்லப்படவுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply