கணக்கெடுப்பு வெற்றி எனது காணியில் 3 குரங்குகள் இருந்தன : நாமல் கரணரத்ன
நேற்று நடைபெற்ற விலங்கு கணக்கெடுப்பு மிகவும் வெற்றிகரமாக இருந்ததாக விவசாய பிரதி அமைச்சர் நாமல் கரணரத்ன தெரிவித்துள்ளார். மில்லியன் கணக்கான மக்கள் அதில் மிகவும் ஆர்வமாக உள்ளனர்.அவரும் இதில் ஈடுபட்டதாகக் கூறினார்.
தனது மனைவியும் மகனும் தனது சுமார் 60 பேர்ச்சஸ் கொண்ட சிறிய நிலத்தில் விலங்கு கணக்கெடுப்பை நடத்தியதாகவும், அங்கு மூன்று குரங்குகள் இருந்ததாகவும் அவர் கூறுகிறார்.
இந்த கணக்கெடுப்பை ஆதரித்த அனைத்து மக்கள், அரசு அதிகாரிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர் மேலும் கூறினார்.
முழு நாட்டு மக்களும் கணக்கெடுப்பில் இணைந்துகொண்டமை வரலாற்று நிகழ்வு என அவர் கூறினார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply