விக்ரபாகு, சிவாஜிங்கம் ஒரே மேடையில் பிரசாரம்
2010, ஜனவரி 26ல் நிகழும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளரான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கமும் புதிய இடதுசாரி முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவும், ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இருவரும் ஒன்றாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவது குறித்து கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னா கருத்து தெரிவித்த போது, இருவரும் யுத்தத்திற்கு எதிரானவர்கள் என்பதுடன் இருவரும் இடதுசாரிகள். அத்துடன் தாம் இருவரினதும் அடிப்படைக் கொள்கைகள் இணையானது எனவும் இருவரும் வடக்கு கிழக்கில் இணைந்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இரண்டு பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களும் இனவாத முகாம்களில் இருக்கின்றனர். இனவாதமற்ற, நடுநிலையான அனைத்துத் தமிழ் மக்களினதும் உரிமைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தான் தேர்தலில் போட்டியிட எண்ணியதாகவும் தமது நோக்கம் இரண்டு பிரதான வேட்பாளர்களும் 50 வீத வாக்குவீதத்தைப் பெறுவதை தடுப்பது எனவும் கலாநிதி விக்ரமபாகு குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply