நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள் பதிவு
கடந்த 21ஆம் திகதி மாத்திரம் நாடளாவிய ரீதியில் 3 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தேர்தல் முறைப்பாடுகள் தொடர்பில் பொலிஸ் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய கடந்த 21ஆம் திகதி மாத்திரம் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸ் நிலையங்களில் 3 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. கண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலத்துஓயா, கஹம்பிலியாவ மரஸ்ஸன பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், மாத்தறை கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கபுகம பகுதியில் நபர் ஒருவரை தாக்கி காயப்படுத்தியதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு, களுத்துறை பிரதேச சபை பேருவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹெட்டிமுல்ல மற்றும் மல்பொக்க வீதிகளை மீளமைக்கும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முறைப்பாடு கிடைத்துள்ளது.
மேலும் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் போது, பேருவளை பிரதேச சபையால் வீதி மீளமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. இதேவேளை கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் சம்பந்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளின் கீழ் துரிதமாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply