யாழ். பெண்மணி கொழுப்பு வைத்தியசாலை பகுதியில் காணவில்லை

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கொழும்பில் காணவில்லை. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சின்னப்பு அஜிந்தா (வயது 25) என்ற இளம் பெண்மணி கொழும்பு தேசிய வைத்தியசாலை வட்டாரத்தில் காணாமல் போனதாக மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இருதய நோய் காரணமாக தனது தயாரான சின்னப்பு தவமணியை (வயது 61) யாழ்ப்பாணத்திலிருந்து அழைத்து வந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருதய நோய்ப்பிரிவில் அனுமதித்த இவர் தனது தாயாருடன் கடந்த ஐந்து நாட்களாக வைத்தியசாலையில் தங்கியிருந்தார். நேற்றுக் காலையில் காலை உணவை வாங்குவதற்காக வெளியே சென்றபோது இவர் கடத்தப்பட்டு இருக்கலாமென அவரது உறவினர்கள் மருதானை பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இந்த யுவதியின் கைத்தொலைபேசிக்குத் தொடர்பை மேற்கொண்டபோது ஒரு ஆண் குரல் கேட்டதாகவும் பின்னர் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சொந்த இடமாகக் கொண்டவர்கள் இவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குடும்பச் சண்டையாக இருக்கலாமெனவும் சந்தேகிக்கப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply