நம்பத்தகுந்த ஆதாரங்கள் முன்வைத்தால் சுயாதீன நீதி விசாரணை

வன்னி இடைத்தங்கள் முகாம்களில் துஸ்பிரயோக சம்பவங்கள் நடைபெற்றமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் முன்வைத்தால் அவை தொடர்பில் சுயாதீன நீதி விசாரணைகள் நடத்தப்படுமென அனர்த்த நிவாரணத்துறை அமைச்சின் செயலாளர் ரஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் வெளிவரும் செய்தித்தாள் ஒன்று, குறித்த இடம்பெயர்ந்தோர் மீது துஸ்பிரயோகங்கள் பிரயோகிக்கப்பட்டதாக வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே அனர்த்த நிவாரணத்துறை அமைச்சின் செயலாளர் இக்கருத்தை தெரிவித்தார்.

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள சிலர் கைதிகள் போல முடக்கப்பட்டு, பாலியல் துஸ்பிரயோகங்களுக்கும் உட்படுத்தப்பட்டதாக பிரித்தானிய செய்தித்தாள் தெரிவித்திருந்தது. இது தொடர்பில் கருத்துரைத்த ரஜீவ விஜேசிங்க, தமக்கு அவ்வாறான முறைப்பாடுக்ள எவையும் கிடைக்கவில்லை எனக்குறிப்பிட்டார். அதேநேரம் குறித்த சம்பவங்கள் தொடர்பில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் முன்வைத்தால் தாம் சுயாதீன நீதி விசாரணைகளை மேற்கொள்வோமென அவர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply