மூன்று இலட்சம் மக்களையும் அவமானப்படுத்துகிறார் தமிழ்வாணி குமார்

இடைத்தங்கல் முகாம்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களையும் தமிழ்வாணி குமார் அவமானப்படுத்தி விட்டாரென இன்னும் அந்த முகாமில் மூன்று வளர்ந்த பெண் பிள்ளைகளுடன் வாழும் கண்டாவளையை சேர்ந்த அன்னபாக்கியம் `ரெலோ நீயூஸ்`க்கு தெரிவித்தார்.

லண்டனில் உள்ள அன்னபாக்கியத்தின் கணவர் மூலம் நாம் அவரை தொடர்பு கொண்டு, வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து வெளியேறி தற்போது பிரிட்டன் எஸெக்ஸில் வசிக்கும் மருத்துவ உதவியாளரான தமிழ்வாணி குமார், தமிழ்ப் பெண்கள் ஒருவேளை உணவுக்காகக் கூட தம்மை படையினருக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனரென பிரித்தானிய பத்திரிகைக்கு தெரிவித்தமை குறித்து கேட்டபோது `முகாம்களில் வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களையும் அவர் அவமானப்படுத்தி விட்டார்` எனத் தெரிவித்தார்.

“தமிழ்ப் பெண்கள் தாம் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளாவதை ஒரு போதும் வெளியில் பேச விரும்புவதில்லை. அவர்கள் இது பற்றி வாயைத் திறக்க விரும்புவதில்லை. தமது பாலியல் தேவையைப் பூர்த்தி செய்ததும் இராணுவ அதிகாரிகள் இப்பெண்களுக்கு உணவு மற்றும் பணம் கொடுத்து அனுப்புவதாக நான் அறிந்திருக்கிறேன்“ என சிங்போர்ட்டில் உள்ள அவரது இல்லத்திலிருந்து குறிப்பிட்ட பத்திரிகைக்கு தமிழ்வாணி குமார் தெரிவித்திருந்தார்.

`யுத்தத்தில் நாம் தோற்றுப்போய் பட்ட அவமானப்பட்டதை விட தமிழ்வாணி போன்றோர் பிரித்தானிய பத்திரிகைகளுக்கு கதை சொல்லி காசு உழைக்கும் அவமானம் கொடியதிலும் கொடியது` என்றார் லண்டனில் சொந்தமாக ஒரு நீயூஸ் ஏஜென்சி கடை வைத்திருக்கும் அன்னபாக்கியத்தின் கணவர்.

தமிழ்வாணி குமாரின் பின்யுத்தகால வன்னி அனுபவத்தை வெளியிட்ட பிரித்தானிய பத்திரிகையால் அவருக்கு `கதையைக் காசாக்கு` (sell your story) என்னும் மேற்குலக ஊடகங்களின் பொதுவான வர்த்தக நியமங்களுக்கமைய பணம் செலுத்தப்பட்டுள்ளதா என்பதை எம்மால் தற்சமயம் உறுதிப்படுத்த முடியவில்லை.

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply