சம்பந்தனின் கருத்து உண்மைக்கு புறம்பானது : ஸ்ரீகாந்தா

டிசம்பர் 9ம் திகதி நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது இல்லையென அல்லது ஜனாதிபதி தேர்தலைப் பகிஷ்கரிப்பது இல்லை எனத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக சம்பந்தன் தெரிவிக்கும் கருத்து உண்மைக்குப் புறம்பானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் என். ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் அவ்வாறான எந்த தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கு அர்த்தபூர்வமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்காத வேட்பாளர்களுக்கு ஆதரவளிப்பதில் எவ்வித பயனும் கிடையாது என ஸ்ரீகாந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய இனப்பிரச்சினை குறித்து பிரதான இரண்டு கட்சிகளின் வேட்பாளர்களும் உறுதியான கருத்துக்களை முன்வைக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சி பிரதான இரண்டு கட்சிகளுக்கும் ஆதரவளிக்கக் கூடாது என அவர் தெரிவித்துள்ளார்.

சுயேற்சை வேட்பாளர் எம்.கே. சிவாஜிலிங்கத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் அல்லது தேர்தலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிஷ்கரிக்க வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த ஞாயிற்றுக் கிழமை ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நடைபெற்ற சந்திப்பு வரவேற்கத் தக்க வகையில் அமைந்துள்ளதெனவும், தமது கட்சி உறுப்பினர்களினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜெனரல் சரத் பொன்சேகா சிறந்த முறையில் பதிலளித்ததாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply