இன்னும் முடிவுக்கு வரமுடியாத நிலையில் கூட்டமைப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக இறுதி முடிவெடுப்பதற்காக இன்று கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்த முடிவுக்கும் வரமுடியாத நிலையில் உள்ளதாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் இன்றைய சந்திப்பு நாடாளுமன்ற கட்டிடத்தொகுதியில் முற்பகல் 10 மணி தொடங்கி நீண்ட நேரம் நிகழ்ந்ததாக சொல்லப்படுகிறது.
இன்றைய சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மும்மூர்த்திகளான சம்பந்தர், மாவை, சுரேஸ் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடனும் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுடனும் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் குறித்து பேசப்பட்ட போதும் எந்த முடிவுக்கும் வரமுடியாத நிலையில் பிற்பகல் 4 மணிக்கு சந்திப்பு முடிவுக்கு வந்தது.
இன்றைய கூட்டத்தில், சிவநாதன் கிசோர், ஸ்ரீகாந்தா ஆகியோர் பங்கேற்கவில்லை.
செல்வம் அடைக்கலநாதன், தங்கேஸ்வரி மற்றும், சந்திரகாந்தன் ஆகியோர், கொழும்பில் இல்லாமையால் பங்கேற்கமுடியவில்லை எனவும் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா, அரியநேந்திரன், சுரேஸ் பிரேமசந்திரன், கஜேந்திரகுமார், கஜேந்திரன், பத்மினி சிதம்பரநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோகராதலிங்கம், இமாம், துரைரட்னசிங்கம், சிரில், ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றியதாக சொல்லப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply