பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழைய மாணவன் மலேசியாவில் படுகொலை

மலேசிய இளைஞர்கள் நடத்திய தாக்குதல் சம்பவமொன்றில் காயமடைந்த கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி பழையமாணவனான சிறிசாரங்கன் (2005 A/L கணிதப்பிரிவு) உயிரிழந்துள்ளார். 
 
மலேசியாவில் கல்விபயிலும் இந்திய மாணவர்களைக் குறிவைத்து மலேசிய இளைஞர்கள் குழுவொன்று கடந்த 26ஆம் திகதி தாக்குதல் நடத்தியது. இந்திய மாணவர்கள் என நினைத்து இலங்கை மாணவர்கள் இருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இத்தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்த மலேசிய நோட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தின் பொறியியல்பீட மாணவனான சிறிசாரங்கனும் மற்றைய மாணவனும் சபாங் நகரிலுள்ள சேர்டன் வைத்;தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை மலோசியாவிலுள்ள இலங்கை தூதரக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டிருந்தனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரங்கன்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தெரியவருகிறது. இவருடைய சடலம் கொழும்புக்கு எடுத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

உயிரிழந்த இந்துக் கல்லூரி பழைய மாணவன் சாரங்கனின் குடும்பத்தாருக்கு இந்துக் கல்லூரியின் பழையமாணவர் சங்கம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply